புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்குக் கணக்கு என்கிற விசாரணைக் கைதியை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் போலீஸ் ‘எஸ்கார்ட்’களில் ஒருவராக உடன் பயணிக்கிறார் வேந்தன் . ஆனால், சேலத்தைச் சென்றடையும் வழி நெடுக, கணக்கைக் கொலை செய்ய ஒரு கூலிப்படை சளைக்காமல் துரத்தி வந்து தாக்குகிறது. இன்னொரு பக்கம், போலி என்கவுன்டர் மூலம் கணக்கின் கதையை முடிக்கச் சில போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். போட்டிப் போட்டு இவர்கள் ஏன் கணக்கைக் கொல்ல நினைக்கிறார்கள்? ‘எஸ்கார்ட்’ மாறனால் கணக்கைக் காப்பாற்ற முடிந்ததா என்பது கதை.
ஒரு கொலை விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, துண்டாடப் பட்ட பிளாஷ் – பேக்குகள் வழியாகச் சொல்லும் திரைக்கதை உத்தி ஈர்க்கிறது. கணக்கின் காதல் வாழ்க்கையைச் சிறிது சிறிதாகத் தெரிந்துகொண்டு, அவனைப் பாதுகாக்கத் தொடங்கும் வேந்தனுக்கும் கணக்குக்கும் இடையில் அன்பும் அக்கறையும் பூக்கும் தருணங்களை நன்றாகவே சித்தரித்திருக்கிறார்கள்.
மலராக நடித்துள்ளார் ஜான்விகா கலகேரி. நல்ல கதாபாத்திர வடிவமைப்புடன் தொடங்கினாலும், படத்தின் முடிவில் பலமற்றதாக போய் விடுகிறது ஜான்விகாவின் ஏற்றிருக்கும் பாத்திரம். லாட்ஜ் ஓனர் ராமா நாயுடுவாக யோகிபாபு நடித்துள்ளார். தனது பாணியில் அனைவரையும் கலாய்த்துக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். நாகராஜ் எனும் குணசித்திர வேடத்தில் பொருந்தும்படி, தயாரிப்பாளர்களில் ஒருவரான தயா பன்னீர் செல்வமே நடித்துள்ளார்.
பொருத்தமான இடத்தில் தங்கும் விடுதி ஊழியராக வந்து, குணச்சித்திரம் காட்டிச் செல்லும் யோகிபாபு, உதயாவையும் அஜ்மலையும் மரணக் கலாய் செய்யும் ஒன்லைனர்கள் திரையரங்கில் அப்பாஸ் அள்ளுகின்றன. மருதநாயகத்தின் ஒளிப்பதிவு, நரேன் பாலகுமாரின் இசை ஆகிய அம்சங்கள், ‘ஓவர் டீடெய்ல்டு’ திரைக்கதையைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. காதல், நகைச்சுவை, த்ரில்லர்,
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதை செய்திருந்தால் நல்லவனாக இருந்திருப்பான் அக்யூஸ்ட். ஆனால் சொதப்பலான் காட்சி அமைப்புகள் படத்தை தொய்வடைய வைக்கின்றன.