KollywoodNow

Tamil CInema Updates

விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி  ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த,  மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர்.

வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் உடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு  நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறினார். பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். விஜய் சேதுபதி, நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியதும் வீடியோவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தது.

இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB  Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார். படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான  இசையமைப்பால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *