KollywoodNow

Tamil CInema Updates

நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”.

இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது…,
இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடன இயக்குநர் விஜயராணி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் புகழ் சார், இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. 5 பாடல்களில் 3 பாடல்களை குறைந்த செலவு மற்றும் குறைந்த நேரத்தில் மிகவும் உழைத்து அழகாக படமாக்கியிருக்கிறோம். இந்த படத்தில் ஒவ்வொருவரின் உழைப்பும் திரையில் கண்டிப்பாக தெரியும். இயக்குநர் அசோக் இந்த படத்திற்காக மிகவும் பாடுபட்டு படத்தை, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இசையமைப்பாளர் அஸ்வின் வழங்கிய பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த படம் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *