நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நகைச்சுவை பாணியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அரசியல் நையாண்டியோடு வரும் இந்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடும் காட்சிகளாக இருக்கின்றன. அவரது அரசியல் சார்ந்த வசனங்கள் தற்போது மீம்ஸ்களில் அதிகமாக பதிவிடப்படுகிறது. இதற்கு முன்பு அவர் நடித்த 49 ஓ என்ற திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்து விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றிப் பேசினார். தற்போது ராஜகோபால் இயக்கத்தில் ஒத்த ஓட்டு முத்தையா படத்திலும் கடுமையான அரசியல் நையாண்டிகளுடன் தயாராகி வருகிறார் கவுண்டமணி. ஆளும் கட்சி, எதிர்கட்சி மாநில அரசு, மத்திய அரசு என்று எந்த பாராபட்சமும் பார்க்காமல் அவர் கலாய்த்து தள்ளியிருக்கிறார் என்கிறார்கள். கவுண்டமணியோடு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறார்கள். படம் வந்த பிறகு கவுண்டமணியின் வசனங்கள் தேரதல் களத்தை கலக்கும் என்கிறார்கள். சென்சாரில் இந்தப் படத்தை அனுமதிப்பார்கலா என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
கவுண்டமணி படத்திற்கு தடையா ?