KollywoodNow

Tamil CInema Updates

சலங்கை ஒலி மாதிரியான ஒரு படத்தில் நடிக்க ஆசை – ஜெயம் ரவி

jeyam ravi

ஜெயம் ரவி சைரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தில் பல சஸ்பென்ஸ் சம்பவங்கள் இருப்பதை அவரிடம் பேசியபோது தெரிந்தது. இந்த ஆண்டு அதிக் திரைப்படங்களில் ரவி நடித்து வருகிறார். இது பற்றி அவரிடம் பேசினோம்.

தமிழ் சினிமாவில் தங்கள் பயணம் எப்படி இருக்கிறது ?
சிறப்பாக இருக்கிறது. நமக்கு கிடைக்கும் கதைகள் எல்லாமே மக்களின் வாழ்க்கையிலிருந்து எழுதப்படுவதால் மற்ற மாநிலங்களில் அதிகம் கவனிக்கப்படுகிறது. அதோடு தமிழ் சினிமாவில் மட்டும்தான் கதை திரைக்கதை வசனம் எல்லாவற்றையும் ஒருவரே செய்கிறார்கள். மற்ற மொழிகளில் இதனை பலர் சேர்ந்து உருவாக்குகிறார்கள். இதர்காகவே கதை இலாகாவே இருந்தது. இப்போது மீண்டும் கதையாசிரியர்கள் வரும் சூழல் தொடங்கியிருக்கிறது. இது நல்ல விஷயமாக இருக்கிறது. 2 ஆண்டுகள் உடகார்ந்து கதை எழுதும்போது கதையின் அடித்தளம் உறுதியாக அமைந்து விடுகிறது.

சைரன் திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் வருகிறீர்களே ?
இந்தப் படத்தின் கதைக்களம் அப்படி அமைந்திருக்கிறது. நானும் சமுத்திரக்கனியும் நடித்திருக்கிறோம். நான் சிறையில் அதிக நாடகள் இருந்ததால் டை அடிக்காமல் இருப்பதாக காட்டப்படும். இது கதையில் ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் காட்சியாக இருக்கும்.

அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் இருவரின் பங்களிப்பு என்ன ?
அதுவும் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அதை சொன்னால் சுவாராஸ்யம் இருக்காது, ஆனால் எனக்கும் கீர்த்திக்கும் இருக்கும் உறவு ம் எங்களுக்கும் இருக்கும் போட்டியும் படத்தை சுவராஸ்யப்படுத்தும். ஒருவரையொருவர் சிக்க வைக்க நினைக்கும் அந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

நீங்கள் நடித்த பேராண்மை, பூலோகம் போன்ற படங்கள் வெற்றிக்குப் பிறகு உங்கள் படம் என்ற முத்திரை வரவில்லையே ?
அது ஒரு திரைப்படமாக வெற்றி பெற்றிருப்பது என்பதுதான் முக்கியம். இயக்குனர் ஜனநாதனின் எண்ண்ணமும் அதுதான். அது படமாக ரசிகர்களை போய்ச்சேர வேண்டும் என்றுதான் நினைத்தார். . மனிதரிகளின் வாழ்வாதாரத்தில் இருந்த ஏற்றத்தாழ்வை காட்ட அவர் இயனராகவும், நான் நடிகராகவும் முயற்சி செய்தோம். அப்படித்தான் நான் பார்க்கிறேன். பூலோகத்திற்கு எனக்கு விகடன் அவார்டு கிடைத்தது. இது வெற்றிதானே.

தனி ஒருவன் 2 எந்த நிலையில் இருக்கிறது ?
அதன் வேலை நடந்து கொண்டேயிருக்கிறது. நிறைய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதால் அவர்களின் கால்ஷீட் திட்டமிடல் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அண்ணனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதையை மெருகேற்றிக் கொண்டேயிருக்கிறார். பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதால்தான் கொஞ்ச்சம் நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தக்ஸ் லைப் படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன ?
மணி சாருக்குத்தான் தெரியும். சிலர் கமல்சாருக்கு மகனா என்றுகூட கேட்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் பதில் எனக்கே தெரியாது.

இயக்குனர் ஜனநாதன் பிரிவை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் ?
அவர் இயக்குனர் மாட்டுமல்ல. எங்கள் குடும்பத்தில் ஒருவர். என் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அவரும் வருவார், எனக்கு அவ்ர் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் நடுவில் இருக்கும் உறவாக இருந்தார். அவரை மிஸ் பண்ணுகிறேன்.

சைரன் ஓடிடிக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று பேசப்படுகிறதே ?
இல்லை. தியேட்டரில் பார்க்கத்தான் எல்லா படங்களுமே எடுக்கப்படுகின்றன. அந்த அனுபவமே தனி.

கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்லுங்கள் ?
எனக்கு ரசிகர்கள் பலம் என்பதே குடும்பத்தோடு பார்க்கும் ரசிகர்கள் தான். அந்த ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக சைரன் இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து முடித்தேன். இப்போது மீண்டும் கீர்த்தியோடு அந்த ரசிகர்களை திருப்திபடுத்தும் ஒரு கதையில் நடித்திருக்கிறேன். இதில் அப்பா மகள் உறவு என்பது கூடுதல் பலம்.

புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி ?
அப்பாவிடம் நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் நிறைய கதை கேட்பதும் அதற்கு நேரம் ஒதுக்குவதும்தான். கதை பிடித்திருந்தால் எனக்கு தகுந்தபடி இருந்தால் நான் புதிய இயக்குப்னர்களாக இருந்தாலும் ஓகே சொல்லி விடுகிறேன். இது எனக்கும் லாபம்தான் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது முக்கியமாக இருகிறது. அவர்கள் திறமையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். எனது நட்சத்திர அந்தஸ்த்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு பரத நாட்டியம் தெரியும் அது போன்ற கதையில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா ?
உண்மைதான் அப்படிபட்ட ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. கமல்சார் நடித்த சலங்கை ஒலி படம் போல அந்தப் படம் இருக்க வேண்டும். அப்படி ஒரு கதையை அண்ணன் வைத்திருக்கிறார். அதில் நான் நடிப்பேன்.

ஓடிடியில் அதிகமாக மலையாள திரைப்படங்கள் வெளி வருகிறது தமிழில் அப்படி சூழல் இல்லையே ?
அவர்களின் பட்ஜெட் செலவிற்கு தியேட்டர், ஓடிடி என்று எதில் வந்தாலும் அவர்கள் லாபம் சம்பாதித்து விடுவார்கள். ஆனால் நமக்கு தியேட்டரில் வந்து ஓடினால்தான் அதிக லாபம் சம்பாதிக்க முடியும். இந்தான் சிக்கல்.

நீங்கள் படம் இயக்கும் திட்டம் என்னவானது ?
கண்டிப்பாக 3 திரைப்படங்கள் எடுக்க இருக்கிறேன். முதல் கதையில் யோகிபாபு நடிக்கலாம். அடுத்த கதையில் நான் நடிப்பேன். இன்னொரு கதையில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றார் ஜெயம் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *