கதை ; சதீஷ் ஒரு சிறந்த மேஜிக் நிபுணர. தன் குடும்பத்தை சிதைத்தவர்களை பழி வாங்க வேண்டும் என்று ஒரு திட்டத்தை தீட்டுகிறார். இதன் அடிப்படையில் வில்லன் கும்பல் கடத்தும் வைரத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு, வில்லன்களையும் அங்கே வரவழைக்கிறார். இதன் மூலம் எப்படி வரைத்தை கொல்ளையடிக்கிறார். வில்லன்களை எப்படி பழி தீர்க்கிறார் என்பதையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கி.
நடிப்பு ; சதீஷ் படம் முழ்வதும் வரும் நகைச்சுவை நாயகனாக அசத்தியிருக்கிறார். குடும்பத்திற்காக தவிப்பதும், ஒருதலை காதலிக்காக கொள்ளை முயற்சியில் இறங்குவதும் அவர் மேல் பரிதாபத்தை வர வழைக்கிறது. நாயகி சிம்ரன் குப்தா இன்னும் கொஞ்ச்சம் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனந்த் ராஜ் வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. இன்னும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். விமான நிலைய காமெடி அட்டகாசம். ஆனால் விமான நிலையத்தில் இவ்வளவு எளிதாக போக முடியுமா ? ஜான் விஜய், மதுசூதனன், சாம்ஸ் காட்சிகள் கலகலப்பு.
இயக்கம் ; திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சதீஷ் சந்தானம் போல் வர வாய்ப்பிருந்திருக்கும். ஏகப்பட்ட ஓட்டைகள் லஅஜிக் மீறல்கள் என்று பயணிக்கிறது படம்.
இசை வெங்கட் பரத் இசை படத்திற்கு பலம்
ரிசல்ட் ; காமெடி சில இடங்களில் சக்ஸஸ் பல இடங்கள் புஸ் புஸ்…