கன்னட திரையுலகில் கே.ஆர்.ஜி. G ஸ்டுடியோஸ், இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை பெருமையுடன் அறிவிக்கிறது.
இவர் இயக்கிய ‘பெங்களூர் டேஸ்’, ‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் வுமன்’ ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி அஞ்சலி மேனன் கூறுகையில் “கே.ஆர்.ஜி. G ஸ்டுடியோஸ் உடன் இணைய இருக்கும் இவ்வேளையில் மக்களை ஈர்க்க கூடிய வகையில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து உலகத்தரத்தில் படங்கள் எடுப்பதிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளைகளை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத, சிந்தனையைத் தூண்டுகிற அதே சமயம் பொழுது போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டி செல்ல ஆர்வமாக உள்ளோம்” என்றார்
தமிழுக்கு வரும் கன்னட இயக்குனர்