நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது…இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது!
நடிகை ராக்தா, ” நான் முதல் முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்த படம் ஒரு சிறந்த கருத்தை பேசி இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள், தமிழ் பார்வையாளர்கள் என இல்லாமல் எல்லோருக்குமான பான் இந்தியா படமாக இது உருவாகி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். இந்தப் படத்தை உருவாக்கிய ஸ்ரீனிவாஸ் சாருக்கு நன்றி. மார்ச் 8 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது”.
நடிகர் நிஹார், “இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்திருக்கிறோம். பெரிய திரையில் பார்க்கும்பொழுது அதன் அனுபவத்தை உங்களால் உணர முடியும். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கும் படம் பிடிக்கும்”.