KollywoodNow

Tamil CInema Updates

சமூகப்பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப்போர்’

S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
‘நாற்கரப்போர்’ குறித்து இயக்குநர் ஸ்ரீவெற்றி கூறும்போது, “சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி, அரசியல்வாதி-மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளையும், அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியான தொலைநோக்கு பார்வை இல்லாத வரை இங்கு இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற அரசியலை பேசுகிறது. அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்க்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது. தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் அரசியல் ரீதியான, ஜாதி ரீதியான, பிரச்சனைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது” என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *