KollywoodNow

Tamil CInema Updates

இந்தியன் 2 விமர்சனம்

நாட்டில் லஞ்சம் வாங்குவதும் ஊழலும் அதிகமாகிப் போய் என்னசெய்தென்று தெரியாமல் தவிக்கிறார்கள் சித்தார்த்தும் அவரது நண்பர்களும். தாங்கள் நடத்தும் யூ டியுப் சேனலில் முடிந்தவரை அம்பலப்படுத்துகிறார்கள்: ஆனால் ஒரு கட்டத்தில் தங்களால் முடியாது என்று தெரிந்ததும், இந்தியன் தாத்தாவை வரவழைக்க கம் பேக் இந்தியன் என்ற சொல்லை வைரல் செய்கிறார்கள். தாய்பே நாட்டிலிருந்து பதில் வருகிறது. மீண்டும் இந்தியன் வருகிறார். அவர் எப்படி அவர்களை பழி வாங்குகிறார் என்பதே கதை.
கமல் மீண்டும் தாண்டவம் ஆடியிருக்கிறார். பல்வேறு கெட்டப்புகளும் சண்டைக்காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. அவருக்கு ஜோடி இல்லை. அதே சமயம் படத்தில் யாருக்கும் ஜோடி இல்லை என்பது கவனிக்க வைக்கிறது. அவரது இயல்பான நடிப்பு மக்கள் அவரை அடித்து விரட்டும் காட்சியில் பார்க்க முடிகிறது. சட்டை இல்லாமல் கமல் சண்டை செய்யும் காட்சிகளில் கைதட்டல் கேட்கிறது. மிரட்டல் சிங்கள் வீல் சைக்கிள் சேஸிங் பரபரப்பு.
சித்தார்த் பிரியா பவானி, ஜெகன் ஆகியோர் தங்கள் வீட்டில் நடக்கும் ஊழலையே காட்டிக்கொருக்கும் காட்சி சிறப்பு. இதனால் அவர்களும் இந்தியன் தாத்தாவை வெறுக்கும் காட்சி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.
சமுத்திரகனி சம்மந்தப்பட்ட காட்சிகளில் சில உறுத்தல் இருக்கிறது. ரேணுகா தம்பி ராமையா ஆகியோரும் வந்து இந்தியன் தாத்தாவின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி படம் ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டம் காட்டுகிறது. இந்தியா முழுவதும் நடப்பதாக காட்டுவது இன்னும் வேகமெடுக்கம் இடங்கள்.
அனிருத் இசையில் கம்பேக் இந்தியப், தாத்தா வர்றாரு பாடல்கள் ஓகே. ரவிவர்மன் ஒளிப்பதிவு படத்தை பிரமிக்க வைக்கிறது.
இந்தியன் 2 – அசத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *