KollywoodNow

Tamil CInema Updates

மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் டீசர் வெளியீடு

ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
பணம் கொடுத்துப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு தரமான படைப்பைத் தர வேண்டும். நல்ல கதை வைத்து படம் செய்யும் இயக்குநருக்குக் கதை எழுதும்போது, இந்த மாதிரி நடிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள், பெரிய ஹீரோ படம் என்றால் அவருக்கு எனக் கதை மாற்றி, சீன் மாற்றி, இறுதியாக நினைத்தது வராது. இந்த மாதிரி சின்ன படத்தில் அது நிகழாது. பெரிய ஹீரோ படம் நல்லாயில்லை என்றாலும், அது வைரலாகிறது. ஆனால் சின்ன படத்திற்கு நல்லா இருந்தாலும் அது நிகழ்வதில்லை, ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஷேன் உடன் மலையாளத்தில் வேலை பார்த்தாலும், தமிழில் வேலை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு படம் நன்றாக எடுக்கும் போது, எல்லோருடைய பங்களிப்பும் மிக நன்றாக வந்து விடும். இப்படம் மிகத் தரமான படைப்பாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இளன் பாடல் மிக நன்றாக எழுதியுள்ளார். கல்யாணம் பற்றி மிக அருமையான பாடலாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சி, வாலி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *