KollywoodNow

Tamil CInema Updates

அந்தகன் – த பியானிஸ்ட்

பிரசாந்த் அழகான திறமையான பியானோ மாஸ்டர். தனக்கு பியானோ வகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, பரிதாபம் காட்ட கண் தெரியாதவர் போல் லென்ஸ் வைத்துக் கொண்டு நடிக்கிறார். அப்படி ஒரு நாள் சிம்ரன், கார்த்திக் வீட்டுக்கு பியானோ வாசிக்க போன இடத்தில் கார்த்திக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை பார்த்து விடுகிறார். சிம்ரனுக்கு துணையாக அங்கு போலீஸ் சமுதிரகனியும் இருக்கிறார். ஆனாலும் சமாளித்து விட்டு வீடு வந்து சேரும் அவருக்கு அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.
பிரசாந்திற்கு பார்வை தெரியுமோ என்கிற சந்தேகம் சிம்ரனுக்கு வந்து, போலீஸில் சொல்லி விடுவாரோ என்று சதி செய்து பிரசாந்திற்கு நிஜமாகவே பார்வை போக வைக்கிறார். இந்த நிலையில் போலீஸ் சமுத்திரகனி பிரசாந்தை துரத்த, இன்னொரு பக்கம் கிட்னி திருடும் டாக்டர் கே.எஸ்.ரவிகுமார் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார். இவர்கள் அனைவரிடமிருந்தும் எப்படி தப்பிக்கிறார் என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறது அந்தகன் படம். அதை சுருங்கச்சொல்லி அழகுப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் தியாகராஜன்.
பிரசாந்த் பார்வையற்றவர் போல நடப்பதும், கொலை நடக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சியை காட்டாமல் சமாளிப்பது சிறப்பு. அதே போல சிம்ரம் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வந்தவுடன் அங்கு அவர் சமாளித்து நடக்கும் இடமும் கைதட்டல் பெருகிறது. தன்னை கடத்தி வந்த யோகிபாபு, ஊர்வசி ஆகியோரிடம் மீனாட்சி டாட்டூவை சொல்லும் இடம் நமக்கே சர்ப்பரைஸ் கொடுக்கிறது.
சமுத்திரகனி திடுக்கிட வைக்கும் போலீஸாக வருகிறார். நல்ல வாய்ப்பு அழகாக பயன்படுத்தியிருக்கிறார். கார்த்திக் நடிகர் கார்த்திகாகவே வருகிறார். அதே ஸ்டைல். துள்ளல் என்று அட்டகாசப்படுத்துகிறார். சமுத்திரகனி மனைவியாக வனிதா விஜயகுமார் அன்புக்கு உருகுவதும் ஆத்திரத்தில் சுடுவதுமாக கைதட்டல் பெறுகிறார். கே.எஸ்.ரவிகுமார் ஊர்வசி யோகிபாபு ஆகியோர் நகைச்சுவையான இடம் கலகலப்பாக இருக்கிறது.
இயக்குனராக தியாகராஜன் நல்ல உழைப்பில் படத்தை உருவாக்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு நல்ல திருப்பங்களுடன் வந்திருக்கிறது. சிம்ரனின் இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். கடுப்பிலும், கோபத்திலும் பிரசாந்தை பார்க்கும் பார்வை அசத்துகிறது. ரவியாதவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் படம் விறுவிறுப்பாக இருக்கிறது.
அந்தகன் -அழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *