ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் அகில் பேசும்போது…’எங்கள் படம் ஐடென்டிட்டி இங்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கலெக்சன் உயர்ந்து வருகிறது. இந்தப்படம் பார்த்து, பாராட்டி கருத்து தெரிவித்த, அனைத்து நண்பர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி. இப்படத்தில் கதை, ஆக்சன் காட்சிகள் எல்லாம் உங்களுக்காக 1 1/2 வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கியது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி’ என்றார்.
நடிகர் வினய் பேசியதாவது.. அகில் 2020ல் இந்தப்படத்தின் கதை சொன்னார். யார் வந்தாலும், யார் வராவிட்டாலும், இந்தப்படம் நான் செய்வேன் என்றேன். பின் திரிஷா கமிட்டானதாகச் சொன்னார்கள். அப்போதே இந்தப்படம் வெற்றி என்பது புரிந்து விட்டது. என்னுடைய கேரியரில் இந்தப்படம் மாதிரி கதை வந்ததில்லை, டொவினோ தேர்ந்தெடுத்து படங்கள் செய்பவர். டொவினோ, அகில் இருவருக்கும் இந்தப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றிக் கூறிக்கொள்கிறேன். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான கட்டத்தில் வந்தது. மிக மிக என்ஜாய் செய்தேன். தமிழ் ரசிகர்கள் இந்தப்படத்திற்குப் பெரிய வரவேற்பு தந்துள்ளீர்கள் நன்றி’ என்றார்.