KollywoodNow

Tamil CInema Updates

என் மனைவிக்கு சிறந்த நடிகைகான விருதும் கிடைத்தது-குழந்தை வேலப்பன்

வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் ‘யுகம்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இயக்குநர், நடிகர் குழந்தை வேலப்பன், ” இனிவரும் காலத்தில் தலைமுறையினருக்கு மொபைலை திருப்புவதற்கு கூட சோம்பேறித்தனமாக இருக்கும் அந்த சோம்பேறித்தனத்தை எப்படி காசாக்கலாம் என்பதற்கான கான்செப்ட் தான் இந்த வெட்டிகள் ஐடியா, என்று சமீபத்தில் நான் கலந்து கொண்ட கான்ஸ் திரைபட விழாவில் வெர்டிகள் சினிமா வருங்காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என ஒரு கலந்துரையாடல் நடந்தது, அதில் கலந்து கொண்டது தான் இந்த வெப் சீரிஸ் எடுக்க காரணமாக அமைந்தது. எந்த பார்மேட்யாக இருந்தாலும் கதை சொல்லும் விதம் தான் அதை ரசிப்பு தன்மைகுள் கொண்டு செல்லும், ஆரம்பத்தில் இந்த கதையை நான் சொல்லும் பொழுது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அதை எழுதிக் கொண்டு போய் கொடுத்த பொழுது புரிந்து கொண்டு உற்சாகப்படுத்தினார்கள்.படம் எடுக்கும் சில சவால்கள் காத்திருந்தது, அதை புரிந்துகொண்டு அதற்காக கேமராமேன் சரவணன்ராமசாம சில மாற்று முறைகள் கையாண்டு சிலவற்றை கற்றுக்கொண்டே மொத்த குழுவும் சேர்ந்து உழைத்து படம் எடுத்து முடித்தோம். உலகம் முழுவதும் வெர்டிகள் சினிமாவுகாக நடக்கும் திரைப்பட விழாவிற்கும் அனுப்பி வைத்தோம். அதில், டொரொண்டோ மற்றும் இத்தாலியில் சிறந்த வெர்டிகள் படம் மற்றும் இந்தப் படத்தில் நடித்ததற்காக என் மனைவிக்கு சிறந்த நடிகைகான விருதும் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. அதன் தொடர்ச்சியாக வெர்டிகள் லா சினிமாஸ் என்ற youtube சேனல் ஆரம்பித்து ‘யுகம்’ வெப் சீரிஸ்யாக வெளியிட்டுள்ளோம், அதில் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பார்க்கலாம், நிச்சியம் பார்வையாளர்களின் ரசிப்பு தன்மையை அடுத்த கட்டத்துக்கும் மாற்றும் என்ற நம்பிக்கையுள்ளது. உங்கள் அனைவரின் ஆதர்வும் நிச்சயம் தேவை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *