கீர்த்தி சுரேஷ் சோலோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம் இது. சம்ந்தா, ஹன்சிகா, திரிஷா ஆகியோரின்ன் வழியில் கீர்த்தியும் கதை நாயகியாக நடிக்க வந்திருக்கிறார். ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் சிரிக்க வைத்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்.
பாண்டிச்சேரியின் பெரிய ரவுடியான சூப்பர் சுப்பராயன், தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து விட, அவரை வெளியேற்றும் முயற்சியில் கீழே விழுந்து உயிரிழந்து விடுகிறார். அவரது மகனான சுனில், காணாமல் போன தனது தந்தையை அடியாட்களுடன் தேட, மறுபக்கம் உயிரிழந்த ரவுடியின் உடலகை கைப்பற்றி அதன் மூலம் ரூ.5 கோடி பெறுவதற்காக சிலர் முயற்சிக்கிறார்கள்.
இதற்கிடையே, உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் கீர்த்தி சுரேஷின் குடும்பம் ஈடுபடும் போது, அவரால் பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், கீர்த்தி சுரேஷை பழிவாங்க துடிக்கிறார்.
இப்படி பிணத்தின் பின்னாடி ஒரு கூட்டமும், கீர்த்தி சுரேஷ் பின்னாடி போலீஸும், காணாமல் போன ரவுடியை தேடி அவரது ரவுடி குடும்பம்பமும் மேற்கொள்ளும் இந்த பயணம் இறுதியில் ஒரே புள்ளியில் இணைய, இது கீர்த்தி சுரேஷின் குடும்பத்தை எப்படியெல்லாம் அலைகழிக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் இயக்குனர் ஜே கே சந்துரு
கதையின் நாயகியாக மகாநடிகை கீர்த்தி சுரேஷ் நிறைய காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் ஆக்சன் காட்சிகளில் மட்டும் ஸ்கோரிங் மிஸ்ஸிங். ராதிகா சரத்குமார் அடிக்கும் லூட்டிகளில் ரசிகர்கள் சொக்கிப் போகிறார்கள். அனுபவ நடிப்பு கைகொடுக்கிறது. அவரது நடிப்பு படத்திற்கு பெரும்பலம். சூப்பர் சூப்பராயன், சுனில், கிங்ஸ்ட்லி, ஜான் விஜய் ஆகியோரும் படத்திலுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தாலும் படத்தில் காமெடி என்பது கடும் வறட்சியாக இருக்கிறது.
அதனால் படம் ஓடிக்கொண்டிருந்தாலும் நமக்கு எந்தவித உணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் ஆங்காங்கே சில இடங்களில் சிரிக்க முடிகிறது. அதுவும் அந்த தெலுங்கு வில்லன் தோற்றமும் அவரது தமிழ் உச்சரிப்பும் சிரிக்க வைக்கிறது.
கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் ஒன்று, இரண்டு பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா.பி, காட்சிகளை கலர்புல்லாகவும், படத்தை பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் பிரவீன் கே.எல் கிரிஷ்ப்பாக கட் செய்துள்ளார்
நல்ல நகைச்சுவை எடுத்தாளரை வைத்துக்கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தால் படம் மனதில் நின்றிருக்கும். கீர்த்திக்கு அந்த பெயரே அடையாளமாக மாறியிருக்கும். ஆனால் சொத்தப்பி எடுத்து விட்டார்கள்.
ரிவால்வர் ரிட்டா – துரு பிடித்த துப்பாக்கி