KollywoodNow

Tamil CInema Updates

ஆர். எம். வீரப்பன் ஆவணப்படம்

அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV The Kingmaker” ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது.

ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருடன் பணியாற்றிய அவர், பின்னர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாக இருந்தார்.

திரு. ஆர். எம். வீரப்பன் அய்யாவின் சேவை, ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு அவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டுள்ளது.

அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆவணப்பட இயக்குநர் பினு சுப்பிரமணியம், உண்மை மற்றும் வரலாற்றை எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்யும் வகையில் இந்த படத்தை வடிவமைத்துள்ளார்.

அவரின் ஆராய்ச்சி, கதை சொல்லும் திறன், மற்றும் காட்சிகளை நுணுக்கமாக உருவாக்கும் நடை இந்த ஆவணப்படத்தின் முக்கிய பலமாகும்.

ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் குழு அருளாளர் வீரப்பன் அய்யா பிறந்த கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் நேரடியாக உரையாடி பல முக்கிய தகவல்களை சேகரித்தது.

மேலும் சினிமா, அரசியல், இலக்கியம், ஆன்மீகம், ISRO விஞ்ஞானிகள், மற்றும் வரலாற்றாளர்கள் உள்ளிட்ட பல துறைகளின் நிபுணர்களை சந்தித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *