ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு ” M G 24 ” என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசையா சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ஸ்ட்ரைக்கர் படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.
மயிலாஞ்சி படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விசாரணை படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மலையாள நடிகர் அப்துல் பஷில் ஆகியோர் வில்லன்களாக நடிக்க இவர்களுடன் பிம்மிசிவா, அர்ஜுன் கார்த்திக், பிரபாகரன் நாகராஜன், யுவராஜ்.S, காளியப்பன், சுரேஷ் பாலஜி, பார்பர் பாலு, ஜெயஸ்ரீ ஸ்ரீதரன், சீனு ஆகியோர் நடித்துள்ளனர்.
B. பாலாஜி & நவீன்குமார் இருவரும் ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரிடம் உதவியாளராக பணியாற்றிய சதாசிவ ஜெயராமன் இந்த படத்திற்கு இசையமைக்க, பிரியன், பித்தன் வெங்கட்ராஜ், பூவிழி மூவரும் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
பிரபல கலை இயக்குனர் V.K.நட்ராஜ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். பாலுமகேந்திரா பட்டறையின் மாணவர் நவீன்குமார் எடிட்டிங் செய்துள்ளார். வி.தனசேரன் கதை விவாதம் மற்றும் CG பணிகளை மேற்கொண்டுள்ளார். அருண்கார்த்திக் நடனம் அமைக்க, பிரவீன், ரஞ்சித் இருவரும் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.