நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். பலமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய நடிகர் YG மகேந்திரன், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறியது என்றாலும் கதை கேட்ட போதே வைப் நன்றாக இருந்தது. படத்தின் பாடல்களையும் ட்ரைலரையும் தற்பொழுது பார்க்கும் பொழுது மோகன் படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் என தெரிகிறது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்தக் கதை இன்னொரு ‘பாகுபலி’. இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர சான்றுகளோடு அற்புதமாக எடுக்கப்பட்ட படம் இது. தேசிய உணர்வோடு பாரம்பரியத்தையும் இந்த கதை சொல்லும். ராம நாமி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நிறைய ஆராய்ச்சி செய்து மோகன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.