கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்திருக்கிறார். பீரியாட்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விருத்தி கிரியேசன் – சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
விரைவில் தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, தயாரிப்பாளர் வர்தன் ஹரி , ஒளிப்பதிவாளர் லவித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் வர்தன் ஹரி பேசுகையில், ” ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் கன்டென்ட் ஓரியண்ட்டட் மூவி. இந்தத் திரைப்படத்தை ஒட்டுமொத்த பட குழுவினரும் அர்ப்பணிப்புடன் உருவாக்கி இருக்கிறோம். உங்களின் ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.