ஒரு கிராமத்தில் பாரம்பரிய வாழ்ந்து வரும் ஒரு பாழடைந்த அரண்மனை இருக்கிறது. அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜா ராணி இருவரும் சாபத்தினால் வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். அதற்கு தீர்வாக கிடைத்த ஒரு அதிசய பூவை வைத்து, அதோடு சேர்த்து, குழந்தைகளின் இதயத்தை சமைத்து சாப்பிட்டால் மீண்டும் இளமை பருவத்தை அடைவதோடு சாகா வரத்தையும் பெறுவார் என்று தீர்வாக ராஜா கொடுக்கிறார். வயதான தோற்றத்தில் வாழந்து வரும் ஒச்சாயி என்ற கிழவி இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
ஒச்சாயி கிழவி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது குழந்தைகளின் இதயத்தை சமைத்து சாப்பிட காத்திருக்கிறார். இப்படியாக ஒவ்வொரு 30 ஆண்டுகள் கழித்தும் ஏற்படும் மர்ம மரணத்தை விசாரிக்க காவல் துறை களம் இறங்குகிறது. இந்நிலையில் அரண்மனையில் புதிதாக தங்குகிறார்கள் ஒரு ஜோடி. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை அந்த சூனியக்காரி ஒச்சாயி கிழவியிடமிருந்து போலீஸ் காப்பாற்றுகிறதா இல்லையா என்பதை திரில்லர் படமாக காட்டியிருக்கிறார்கள்.
படத்தில் சூனியக்காரியாக வடிவுக்கரசி பயமுறுத்தியிருக்கிறார். பல்லை கடித்து முக சுருக்கத்துடன் அவர் நடிப்பில் திகில் தெரிகிறது. நீண்ட நாட்களுப்பிறகு படம் முழுவதும் வடிவுக்கரசியின் பங்களிப்புள்ள படத்தை பார்க்க முடிந்தது.
போலீஸாக வரும் திலீபன், சிங்கம்புலி ஆகியொரு கதையை நகர்த்த முக்கிய கதாபாத்திரங்களாக வருகிறார்கள். குழந்தைகளை காப்பாற்ற சிங்கபுலியின் தவிப்பும், பயமும் படத்தை நமக்குள் கொண்டு செல்ல உதவுகிறது. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் எடுக்கும் அதிரடி முடிவு அதிர்ச்சி.
கஜராஜ் கோவிலில் பிடாரி அம்மன் வழிபாடும் கிராமத்து மக்களின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது. பிடாரி அம்மனை வழிபட்டதன் மூலம் எதுவுமே நடக்காமல் போவது திரைக்கதையில் ஏற்பட்ட ஓட்டை.
படத்தில் பல காட்சிகளில் கவனமின்மையாக கையாளப்பட்டிருப்பது படத்தில் பெரிய குறையாக இருக்கிறது. புராண மந்திர் போன்ற திகில் படமாக வந்திருக்க வேண்டியது. இயக்குனர் விஜயகுமாரனின் வறட்சியான திரைக்கதையால் தொய்வடைந்து விட்டது.
இசை படத்தில் முக்கிய பங்களிப்பு அதுவும் ஒச்சாயி வருவா உச்சுக்கொட்டி வருவா என்ற பாடல் திகில் பரவ வைக்கிறது. செல்லையா பாண்டியன் இசை. மணிகண்டனின் ஒளிப்பதிவு திகில் காட்சிகளுக்கு உதவுகிறது.
அனுபவமுள்ளவர்களுடன் கதை விவாதமும், காட்சிப்படுத்தும் விதமும் கலந்து பேசி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மற்றபடி நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தைகளை மிரள வைக்கும் திகில் படம் பார்க்க முடிந்தது.
க்ராணி – ஒச்சாயி கிழவி வருகிறாள்
க்ராணி – விமர்சனம்