பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, “டாக்ஸிக்” படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, AP–TG சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) உடன் ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை விநியோக ஒப்பந்தத்தை கைப்பற்றியதன் மூலம் இந்தப் படம் செய்திகளில் இடம்பிடித்தது. இது இந்திய திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அடுத்ததாக வெளிநாட்டு ஒப்பந்தம் அதை விட பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
சர்வதேச அளவில், “டாக்ஸிக்” திரைப்படத்தை Phars Film என்ற முன்னணி வெளிநாட்டு விநியோக நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது படத்தின் அபூர்வமான முன்-வெளியீட்டு பயணத்தில் இன்னொரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் இந்திய திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ₹105 கோடி முன்பணம் கமிஷன் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது — இது உலக சந்தையின் மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. டீசர் கூட வெளியாகாத நிலையில் இப்படம் இத்தனை பெரிய எண்ணிக்கைகளைப் பெற்றிருப்பது, சந்தையில் இப்படத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் ராக்கிங் ஸ்டார் யாஷ் மீது உள்ள ரசிகர்ளின் எதிர்பார்ப்பையும் காட்டுகிறது.
முக்கியமாக, இந்த வரலாற்றுச் சாதனை ஒப்பந்தம் டாக்ஸிக் படத்தின் இந்திய மொழி பதிப்புகள் (கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்) மட்டுமே பொருந்தும். ஆங்கில பதிப்பு இதில் சேர்க்கப்படவில்லை — இது இந்திய மொழி பதிப்புகளின் தனிப்பட்ட வெளிநாட்டு வலிமையை மேலும் வலியுறுத்துகிறது.
“டாக்ஸிக்” மீதுள்ள எதிர்பார்ப்புகளுக்கு காரணமுள்ளது. யாஷ் நடித்த முந்தைய படம் KGF: Chapter 2, உலக சந்தைகளில் அபாரமும் வரலாற்று முக்கியத்துவமுமான வர்த்தகத்தை நிகழ்த்தியது. குறிப்பாக GCC பகுதியில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக சாதனை படைத்தது. பல சர்வதேச பிரதேசங்களில் அசாதாரணமான வசூல் சாதனைகளைப் பதிவு செய்தது. அந்த உலக வெற்றிதான் இப்போது “டாக்ஸிக்” படத்தை இன்னும் உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துகிறது.
யாஷ் நடிக்கும் இந்தப் படம், இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரிவான சர்வதேச வெளியீட்டை நோக்கி தயாராகிறது. நேபாளம், ஜப்பான், சீனா தவிர உலகம் முழுவதும் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது “டாக்ஸிக்” படத்தை உலகளாவிய சினிமா நிகழ்வாக நிலைநிறுத்தும் தைரியமான முயற்சியாகும்.
Phars Films நிறுவனத்தின் CEO & Founder திரு. அஹமத் கொல்சின் கூறியதாவது..,
“டாக்ஸிக்” மூலம் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் கவரும் ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த படத்தை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் பெருமை கொள்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களில் இந்தக்கதை கொண்டாடப்படுவதைக் காண ஆவலாக உள்ளோம். இந்த வெளிநாட்டு வெளியீடு Phars Film-க்கு முக்கிய மைல்கல்லாகும். உலகம் முழுவதும் பார்வையாளர்கள் “டாக்ஸிக்” படத்தின் தீவிரத்தையும் உணர்ச்சி ஆழத்தையும் அனுபவிப்பார்கள் என்பதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.”