KollywoodNow

Tamil CInema Updates

டீகன்ஸ்ட்ரக்ட்’ நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னரான அனிருத்

நவீன கால பிராண்ட் மற்றும் கூட்டணிகளின் மாறி வரும் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் இசை உலகின் பிரபல ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருடன் தனது அதிகாரப்பூர்வமான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டணி. ஒரு கூட்ட அரங்கில் இல்லாமல்… இணையத்தின் வாயிலாக தொடங்கி இருக்கிறது.

இதன் மூலம் அனிருத் மற்றும் அவரது ஸ்டைலிஸ்ட் இடம்பெற்ற ஒரு வைரல் இன்ஸ்டாகிராம் ரீலில் இருந்து, இந்த தொடர்பு தொடங்குகிறது. அதில் கூர்மையான பார்வை கொண்ட ரசிகர்கள்… பின்னணியில் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த டீகன்ஸ்ட்ரக்ட் சன்ஸ்கிரீனை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இயல்பான உரையாடல்களின் மூலமாக அலை எழுந்தது. பார்வையாளர்கள் அந்தத் தயாரிப்பை அடையாளம் கண்டு விவாதித்ததன் மூலம் ஒரு ‘ க்ஷண’ நேர தருணத்தை மிகப் பெரும் கலாச்சார பேசு பொருளாக மாற்றினர்.

திட்டமிடப்படாத இந்த கண்டுபிடிப்பின் நம்பகத் தன்மையை உணர்ந்து டீகன்ஸ்ட்ரக் அந்த தருணத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது. ஒரு உண்மையான அன்றாட பயன்பாட்டு நிகழ்வாக தொடங்கிய இது… இப்போது திட்டமிடப்பட்ட விளம்பரத்தை விட உண்மையான இயல்பான தொடர்பில் வேரூன்றிய அந்த அர்த்தமுள்ள கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாலினி அடபு ரெட்டி பேசுகையில்,

”டீகான்ஸ்ட்ரக்ட்’ நிறுவனத்தில் உண்மையான தருணங்களே மிகவும் சக்தி வாய்ந்த கதைகளை உருவாக்குகின்றன என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். குறிப்பிட்ட அந்த தருணத்துடன் மக்கள் எவ்வளவு இயல்பாக ஒன்றி போனார்கள் என்பதை நாங்கள் கண்டபோது… அதை முன்னோக்கி எடுத்துச் செல்வது மிகவும் இயல்பானதாக தோன்றியது. அனிருத் – நம்பகத் தன்மை மற்றும் எளிதில் தொடர்புபாபடுத்தக்கூடிய விசயம் ஆகியவற்றின் உருவமாக திகழ்கிறார். இந்த மதிப்புகள் அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்திற்கு ஆதரவளித்து வரும் மற்றும் அதில் புகழ்பெற்ற எங்கள் பிராண்டுடன் கச்சிதமாக பொருந்துகின்றன,” என்றார்.

தனது சாதனை படைத்த இசை மற்றும் இளைஞர்களுடன் பரந்த தொடர்புக்காக அறியப்படும் அனிருத் ரவிச்சந்தரின் இயல்பான செல்வாக்கும், அவருடைய தனிப்பட்ட பாணியும்… நாடு முழுதும் உள்ள பார்வையாளர்களிடம் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எங்களின் இந்த கூட்டணி…பாரம்பரிய பிரபலங்களின் விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து கலாச்சாரத்திற்கு முதலிடம் கொடுக்கும் மற்றும் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மாறுவதை குறிக்கிறது. இதில் நுகர்வோர் புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்ல பிராண்டுகள் அதற்கு வழிகாட்டியாய் திகழ்ந்து, பதில் அளிக்கின்றன.

இந்த கூட்டணியின் மூலம் டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் தனது சமூகத்தின் கருத்துக்களை கேட்டு.. அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு அவர்களுடன் இணைந்து வளரும் ஒரு பிராண்டாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. மேலும் இன்றைய சூழலில் நம்பகத் தன்மை தான் மிக வலிமையான நாணயம் என்பதையும் இது நிரூபிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *