KollywoodNow

Tamil CInema Updates

பிரதீப் ரங்கநாதன்க்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம் – எஸ் ஜே சூர்யா

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என் மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.

உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ…
நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.

பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம்.
ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது, அது இன்று உண்மையாகி இருக்கிறது.

பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும்.
மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.

இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது.
க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.

இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது.

விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.
எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால் — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும்,
ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் —
நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,
அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *