KollywoodNow

Tamil CInema Updates

கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
‘கான் சிட்டி’ எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்த படம். இதற்கு முன்பு இதுபோன்ற கதைக்களத்தில் நான் நடித்ததில்லை. இயக்குநர் ஹரிஷ் என்னை அணுகிய விதமே மிகவும் தனித்துவமாக இருந்தது. பொதுவாக புதிய இயக்குநர்களுக்கு நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். ஏனெனில் அவர்களிடம் புதிய சிந்தனைகளும் புதிய பார்வைகளும் இருக்கும்.
ஹரிஷ் கதையை சொல்ல வந்தபோது, முதலில் நான் கேட்டது ‘தயாரிப்பாளர் யார்?’ என்பதுதான். இன்று ஒரு படத்தை ஆரம்பிப்பது எளிது. ஆனால் அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது மிகப் பெரிய விஷயம். அந்த நம்பிக்கை இருக்கிறதா என்பதுதான் முக்கியம். ஹரிஷ் அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார்.

அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் படத்தில் இருப்பதாக சொன்னபோது மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. படத்தின் தயாரிப்பிலும், திட்டமிடலிலும் எந்த சமரசமும் இல்லாமல் செயல்பட்டார்கள். அதுவே என்னை இந்தப் படத்தில் இணைத்தது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஹரிஷின் தெளிவான பார்வை. அவருக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாக தெரியும். தேவையில்லாத விஷயங்களைச் செய்யாமல், காட்சிகளைத் துல்லியமாக திட்டமிட்டு எடுத்தார். ஒரு நாள் முன்னதாகவே என் பணிகளை முடித்து அனுப்பிய அளவுக்கு திட்டமிடல் இருந்தது.
படத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘கான் சிட்டி’ உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. அது சாதாரண நகரம் அல்ல. அதன் உள்ளே என்ன நடக்கிறது, அங்கே இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் கற்பனை மற்றும் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சில உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் பணியை நான் குறிப்பாக பாராட்ட விரும்புகிறேன். அவருடைய அணுகுமுறை, காட்சிகளைப் பார்க்கும் விதம் மற்றும் படத்தின் தோற்றத்தை உருவாக்கிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்றைய தலைமுறையின் திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அவர் வளர்வார் என்று நம்புகிறேன்.

அதேபோல் எடிட்டர் அருள் மோசஸ் முதல் படமென்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவரது படத்தொகுப்பு மிகுந்த தரத்துடன் உள்ளது. படத்தின் வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் அவர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

அர்ஜூன் தாஸ் ஒரு நடிகராக தொடர்ந்து புதிய உயரங்களை அடைந்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். யோகி பாபு, வடிவுக்கரசி அம்மா மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர்.

இன்று ஒரு திரைப்படத்தை உருவாக்குவதைக் காட்டிலும் அதை திரையரங்குகளில் வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த சவாலை வென்று ‘கான் சிட்டி’ இன்று ரசிகர்களை சந்திக்க வருகிறது. அதற்காக ஹரிஷையும் படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *