KollywoodNow

Tamil CInema Updates

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது.

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது.

டிரெய்லரில், பவி கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனையும் கொண்ட பவி, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத ஒரு இன்ஃப்ளூயன்சர்.

இதனால், திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிற்கே குடியேறுகிறார். அங்கிருந்து தொடங்குகிறது ஒரு வித்தியாசமான குடும்ப வாழ்க்கை.

புதிய வீட்டில் முதல் சந்திப்பு முதல், குடும்பத்தினருடனான உரசல்கள், எதிர்பாராத சம்பவங்கள், கலகலப்பான தருணங்கள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவமாக மாறுகிறது.

“எப்போதுமே மணமகள்தான் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று யார் சொன்னது?” என்ற கேள்வியை மையமாக வைத்து, திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை இப்படம் சுவாரஸ்யமாக மாற்றிப் பார்க்கிறது.

காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் கலந்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம் என்பதைச் சொல்லும் வகையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகியுள்ளது.

இளன் மற்றும் சான்வி மேகனாவுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் யோகி பாபு கூறுகையில்..,

“இந்த டிரெய்லர் நாங்கள் படப்பிடிப்பில் அனுபவித்த கலாட்டாவில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சாதாரண விஷயங்களிலிருந்துதான் படத்தின் நகைச்சுவை உருவாகிறது. அதனால்தான் அது அனைவருடனும் எளிதாக கனெக்ட் ஆகும்.

ரசிகர்கள் எங்களுடன் சேர்ந்து சிரித்து, குடும்பத்துடன் இந்தப் படத்தை ரசிப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

ஒரு திருமணம்… இரண்டு குடும்பங்கள்… எண்ணற்ற கலாட்டாக்கள்!

இந்த வீட்டுக்குள் வரப்போகும் புதிய மாப்பிள்ளை, அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையையே எப்படி மாற்றப் போகிறார் என்பதுதான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *