மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்களின் தலைமையில், சென்னை தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட தம்பையா ரெட்டி தெருவில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அதன்படி, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை, மாநிலத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு 600 குடும்பங்களுக்கு குக்கர்கள் வழங்கி அமைச்சர் அவர்கள் சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், தேசிய செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் திருமதி. A. சசிரேகா அவர்கள், கழக மாநில செய்தித் தொடர்பாளர் திரு. ஒட்டேரி ஜெயக்குமார் அவர்கள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்களின் நலனையும், சமூகத்தின் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.