உளவுத்துறையில் பணியாற்றிய போஸ் முதல் பாகத்தில் இந்தியாவின் அணையில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டை அகற்றிவிட்டு அங்கிருந்து மகன் விஜி கண்களில் இருந்து மறைந்து போகிறார். அப்பாவை அப்போதிருந்து விஜி தேட ஆரம்பித்த வேளையில் இந்தியாவிற்கு வந்திருக்கும் புதிய ஆபத்தாக ஜப்பான் கண்டுபிடித்த உயிரியல் ஆயுதம் ஒன்று இந்தியா வழியாக உலகை அச்சுறுத்தும் சமூக விரோத கூட்டத்திற்கு விற்கப்படும்போது, அந்த ஆயுதத்தில் கோளாறு ஏற்பட்டு கிரிமிகள் கசிந்து மலைகிராம மக்கள் நோய் தாக்குதலுக்கு ஆட்படுகிறார்கள்.
அதை செயலழிக்க வைக்கும் மாற்று மருந்து ஜப்பானிடம் இருந்தாலும் அதை தர மறுக்கிறது ஜப்பான். அந்த மருந்தை கண்டுபிடித்து அதை இந்தியா கொண்டுவர உளவுத்துறையால் அனுப்பி வைக்கப்படுகிறார். மகன் கார்த்தி விஜி. அதை எப்படி அவர் கடத்தி வருகிறார் என்பதும். அப்பாவான சர்தார் கார்த்தியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதையும் விறு விறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் பி.எஸ்.மித்ரன்.
கார்த்தி முதல் காட்சியிலிருந்து இறுதி வரைக்கும் அடித்து ஆடியிருக்கிறார். இரண்டு பாத்திரத்திற்கும் உடல்மொழி குரல் என்று வித்தியாசப்படுத்தியிருப்பாது சிறப்பு. வழக்கமான காதல் காட்சிகள் இல்லாமால் அடுத்தக்கட்டம் என்ன நடக்கும் என்பது போல படம் முழுவதும் பரபரப்பாக இருக்கிறார். கார்த்தி.
கிராமத்து முருக பக்ராக ஆட்டம் போடுவதும் சண்டைக்காட்சிகளில் துடிப்பு காட்டுவதும் இயல்பாக வருகிறது.
படத்தில் பல காட்சிகளில் கைதட்டல் வாங்குவது எஸ்.ஜே.சூர்யாதான். வசன உச்சரிப்பும், மனிதர்களின் இயல்பான குணத்தை விமர்சனம் செய்யும்போதும் தியேட்டலில் கலகலப்பு. இடைவேளைக்குப் பிறகு அதகளம் செய்கிறார்.
மாளவிகா மோகன் அழகாக வந்து துப்பறிவதில் கார்த்திக்கு உதவுகிறார். யோகிபாபுவும், நிழல்கள் ரவியும் கொஞ்சம் நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்கள்.
மித்ரனின் திரைக்கதை ஆங்கில படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது. எவ்வள்வு நல்ல திரைக்கதையாக இருந்தாலும் இரண்டு மணிநேரம் தாண்டும் போது ஒருவித அலுப்பு ஏற்படுதுவதை தவிர்க்க முடியாது. அந்த வகையில் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். சாம் சி.எஸ் இசை அதிர வைக்கிறது. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு இரவு காட்சிகளை திகில் பரவ காட்டுகிறது.
ஜேம்ஸ் பாண்ட் பட உணர்வை தரும் சர்தார் 2
சர்தார் 2 – விமர்சனம்