KollywoodNow

Tamil CInema Updates

மண்டாடி – விமர்சனம்

இராமநாதபுரம் முகவைப்பட்டினம் பகுதி மீனவ கிராமத்து மக்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்ப்வங்களை படமாக்கியிருக்கிறார்கள். மீனவத்தொழில் மட்டுமல்லாமல், ஆண்டு தோறும் நடக்கும் பாய்மரப்படகு போட்டியில் யார் வெற்றுகிறார்களோ அவர்களே அந்தப்பகுதியில் மண்டாடி என்று அறிவிக்கப்பட்டு கவுரவத்துடன் நடத்தப்படுவார்கள் என்ற வழக்கம் அந்தப்பகுதி மக்கள் மத்தியில் இருக்கிறது.
அப்படி நடத ஒரு கோவில் திருவிழாவில் நடந்த கலவத்தில் எதிர்தரப்பில் ஒருவரை போட்டுத்தள்விட்டு ஊரைவிட்டுப் போய் சென்னையில் வாந்து வருகிறார். சூரி. கடும் கோபத்தில் இருக்கும் எதிர்தரப்பில் சூரியை கண்டால் கொலைவெறியை தீர்க்க சமயம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சூரியின் முன்னாள் காதலியின் மகன் அதே போல ஒரு மோதலில் எதிர்தரப்பிற்கு பயந்து சென்னையில் சூரியிடம் அடைக்கலமாகிறார்.
அவரை காதலிக்காக மீண்டு ஊர்க்கே திருப்பி அழைத்துச்செல்கிறார் சூரி. எதிர்கள் தயாராக இருக்கும் நிலையில் அந்த எதிர்ப்பை சூரி எப்படி எதிர்கொள்கிறார் என்பதை ஆக்ஷ்ன் அடிதடி முரட்டுத்தனத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மதிமாறன்.
சூரி சூரி படம் முழுக்கவே அவர்தான் நிறைந்திருக்கிறார். முகம் முழுக்கவே நிறைந்து காடாக இருக்கும் தாடியுடன் வரும் அவரை தோற்றமே பாத்திரத்தை பதிய வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். முன்னாள் காதலி கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி, காதலியின் மகன், அப்பாவிம் பேசும் காட்சி, அவரது நடிப்புக்கு நல்ல இடங்கள். முழு ஹீரோவாக மாறியிருக்கும் சூரிக்கு வாழ்த்துகள்.
சத்யராஜ் இடைவேளைக் காட்சிகள் கைதட்டல் பெறுகிறது. அவர் இடம் பெறும் காட்சிகள் விறு விறுப்பாக இருக்கிறது. மகிமா நம்பியாரும் பல இடங்களில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். மிதுன் ஜெய்சங்கர் நல்ல தேர்வு. பால சரவணன் படத்தை இலகுவாக்குகிறார். ராம்ஸ் சுஹாஸ், பத்மன் ஆகியோர் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.
படம் நல்ல களமாக அமைந்திருந்தாலும் மீனவ மக்களின் வாழ்க்கையை முழுமையாக சொல்லாதது பலவீனமாக இருக்கிறது. வேறு வேலையே இல்லாமல் பாய்மரப்போட்டிக்காக மல்லுக்கட்டுவதே வாழ்க்கையாக இருப்பது போன்ற காட்சி போர். வாழ்க்கையை விட்டு படம் விலகியிருக்கிறது. இதனால் எல்லோரும் கேமரா முன்பு வந்து நடித்து விட்டுப் போகிறார்கள். மண்டாடி என்பதை சரியாக விளக்காததும் புரியாததும் திரைக்கதை பலவீனம்.
படத்தில் திலீப் சுப்புராயன், பீட்டர் ஹெயின் ஆகியோரின் உழைப்பு பாராட்டுக்குரியது. அவர்கள்தான் களமாடுகிறார்கள். சூரியை ஹீரோவாக்கியதில் அவர்கள் பங்கு முக்கியமானது.
ஓளிப்பதிவு எஸ்.ஆர். கதிர் பல இடங்களில் பாராட்டு பெறுகிறார். கடல் காட்சிகள் கவனம் பெற்கின்றன. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை பின்னணியில் சிறப்பு. ஈ.ரகவ் எடிட்டிங் தனியாக தெரிகிறது வாழ்த்துகள்.
எல்லோரும் சேர்ந்து சூரியாஇ கதாநாயகனாக்க போராடியிருக்கிறார்கள். அவர் சில இடங்களில் காமெடியாகவே தெரிகிறார்.
மண்டாடி – வாழ்க்கை இல்லாத வறட்டு காட்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *