அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.
நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது..,
“இம்மார்டல்” படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும், நேர்மறையான விமர்சனங்களையும் வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி.
படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. “இம்மார்டல்” டிரெண்டிங்கில் வருவதைப் பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது.
வெள்ளிக்கிழமை சிறிய திரைகளில் தொடங்கி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய திரைகள், கூடுதல் காட்சிகள் என படத்தின் ஷோகேசிங்கை மிகச்சிறப்பாக செய்த சக்தி சாருக்கு நன்றி.
இந்தப் படத்தை என்னிடம் முதலில் கொண்டு வந்த எடிட்டர் ஷான் லோகேஷுக்கு நன்றி. முதல் முறையாக ஒரு படத்தை தயாரிக்கும் அருண்குமார் சார், CG பணிகளுக்காக நீண்ட காலம் காத்திருந்து, படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பொறுமையாக இருந்தார். அவருடைய அந்தப் பொறுமைக்கும், நம்பிக்கைக்கும் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
அதேபோல், படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்டர் டிசைனில் சிறப்பாக பணியாற்றிய கோபி பிரசன்னா சார் மற்றும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரிய நன்றி.
வித்தியாசமான கதைக்களம் மற்றும் ஃபேண்டசி திரில்லர் அம்சங்களுடன் ரசிகர்களைக் கவர்ந்துள்ள“இம்மார்டல்” திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.