KollywoodNow

Tamil CInema Updates

ஒரே மாதிரியான படங்களே வருகின்றன: நடிகை ரித்விகா ஆதங்கம்!

நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.
அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.

கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.

நடிகை ரித்விகா பேசும்போது,

“பெரிய படங்களின் வெளியீடுகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது செப்டம்பர் 18 அன்று உறுதியாக திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய த்ரில்லர் படங்கள் வருகின்றன. போலீஸ்காரர், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என்று எல்லாம் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும். ஆனால் இது கண்டிப்பாக அப்படி இருக்காது. வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும்.

ஏற்கெனவே எடுத்த படத்தை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் படம் எடுப்பது என்பது இரட்டை உழைப்பைப் போட வேண்டிய நிலை.கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அப்படி இந்தப் படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் இருமடங்கு உழைத்து இருக்கிறார்கள். சவாலான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சென்று காத்திருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப ரீதியாகவும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள்.
நாங்கள் நடிப்புக் கலைஞர்கள் ஒருமுறை நடித்தால் அவர்கள் இரண்டு மடங்கு உழைத்தார்கள்.இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

படங்கள் திரையரங்குப் படங்கள், ஓடிடி படங்கள் என்று இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகின்றன. எல்லாப் படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.திரையரங்குக்கு வந்த பிறகு ஓடிடியில் வந்தால் மட்டும் அப்போது பார்க்கலாம் .அதுவரை திரையரங்கில் பார்ப்பது தான் நல்ல அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.’தி டார்க் ஹெவன்’ கண்டிப்பாக நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும். நம்பி வரலாம். ஏமாற்றாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *