KollywoodNow

Tamil CInema Updates

திருவிளையாடல் – டிஜிட்டல் புதுப்பொலிவுடன் மறுவெளியீடு

1965ஆம் ஆண்டு வெளியான பழம்பெரும் தமிழ் திரைப்படமான ‘திருவிளையாடல்’, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.*

அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் உருவான திருவிளையாடல், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

1965ஆம் ஆண்டிலேயே கதை, வசனம், நடிப்பு, இசை ஆகியவற்றுடன், அக்காலத்திற்கேற்ற நவீன தொழில்நுட்பங்களையும் திறமையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் திருவிளையாடல். சிறப்பான கதை சொல்லல், வலுவான கதாபாத்திரங்கள், சிறந்த நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் என பல்வேறு அம்சங்களால் இப்படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

பல ஆண்டுகள் கடந்தும் இப்படத்தின் தரமும் தனித்துவமும் குறையாமல், இன்றளவும் பல தலைமுறையினராலும் விரும்பி ரசிக்கப்படும் படைப்பாக *திருவிளையாடல்* திகழ்கிறது. அதன் சிறப்பை குறைத்து மதிப்பிடுவதற்கே இடமில்லாத அளவிற்கு ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் இப்படம், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க திரைச்செல்வங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

தற்போது திருவிளையாடல் திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட காட்சி மற்றும் ஒலி தரத்துடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது. பழம்பெரும் திரைப்படத்தின் அசல் தன்மையைப் பாதுகாத்தபடி, இன்றைய பார்வையாளர்கள் பெரிய திரையில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் அனுபவிக்கும் வகையில் இந்த டிஜிட்டல் புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, அக்டோபர் 1-ஆம் தேதி சென்னை காசினோ திரையரங்கில், திருவிளையாடல் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகன் ஏ.என். பரமசிவம், நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன், இளவரசு, நடிகை வடிவுக்கரசி, நடிகரும் இயக்குநருமான அண்ணாதுரை கண்ணதாசன், கதாசிரியரும் இயக்குநருமான பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும், படத்துடன் தொடர்புடையவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களும் திருவிளையாடல் திரைப்படத்தின் உருவாக்கம், அருட்செல்வர் ஏ.பி. நாகராஜனின் இயக்கத் திறமை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு மற்றும் படத்தில் பணியாற்றிய பல்வேறு கலைஞர்களின் பங்களிப்பு குறித்து தங்களது கருத்துகளையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை, பாடல்கள் என பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கலைஞர்களின் கூட்டு முயற்சியே திருவிளையாடல் திரைப்படத்தின் தனித்துவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக கே.வி. மகாதேவனின் இசையும், கவிஞர் கண்ணதாசனின் பாடல்களும் படத்தின் சிறப்பை மேலும் உயர்த்தின.

அக்காலத்திலேயே சிறப்பான உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்ட இப்படத்தின் தனிச்சிறப்புகளை இன்றைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த மறுவெளியீடு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பழைய தலைமுறை ரசிகர்கள் தாங்கள் ரசித்த படைப்பை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்கவும், புதிய தலைமுறையினர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படைப்பை திரையரங்க அனுபவத்துடன் அறிந்து ரசிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *