KollywoodNow

Tamil CInema Updates

ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர் -விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,

‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார். அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.

ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். தமிழ் மொழி அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. இந்த வயதிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்திருக்கிறார். ஹரிப்ரியா பாடிய பாடலும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர் செந்தில், தனஞ்செயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் எனக்கு அளித்த அன்பையும் வரவேற்பையும் தொடர்ந்து வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் படமும் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன். ‘அப்பா குட்டி’ படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *