KollywoodNow

Tamil CInema Updates

ஜெய் ஆகாஷ் வாழ்த்து

இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

நடிகர் ஜெய் ஆகாஷ் பேசியதாவது..,
இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்று எடுத்த படம் தான் யோக்கியன். இப்போது அவனே அவன் முயற்சியில் இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ் படத்தை இயக்கியுள்ளான். டிரெய்லர் ஷாட்ஸ் எல்லாம் நன்றாக வந்துள்ளது. படத்தில் இருக்கும் அனைவரும் என் நண்பர்கள் தான். படத்தில் எல்லோரும் நன்றாக செய்துள்ளனர். நான் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் சாய் தான் நன்றி மறக்காமல் இருக்கிறான். இவனிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது அவன் ஜெயிக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பட விழாவில் ஜெய் ஆகாஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *