KollywoodNow

Tamil CInema Updates

அஜித்திற்கு கிடைத்தது விஜய்க்கு கிடைக்கவில்லை

சில நாட்களுக்கு முன்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி சென்னையின் முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினறுமான சைதை துரைச்சாமியின் மகன் வெற்றி அவர்கள் இமாச்சல் பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம்தான்.

இந்த விபத்தில் சிக்கிய அவர் தூக்கி வீசப்பட்டு சட்லெஜ் நதியில் விழுந்ததாக சொல்லப்பட்டது. அவருடன் பயணித்தவர்கள் கார் ஓட்டுனர் மரணமடைந்து உடல் மீடக்பட்டது. ஆனால் வெற்றியின் உடலை மீட்க முடியவில்லை. இதனால் மகன் உடலை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபார் கொடுப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் 8 நாட்களுக்குப் பிறகு வெற்றியின் உடலை சிதைந்த நிலையில் சட்லெஜ் நதியிலிருந்து மீட்டனர்.

அவரது உடல் இன்று 13.2.24 சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு மரியாதை செய்தனர். அஜித் வந்து வெற்றியின் உடலுக்கு மரியாதை செய்தார். இதே போல விஜய் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார் பெசண்ட் நகர் மின் ம்யானத்திற்கு வந்தபோது கட்டுகடங்காத கூட்டம் அவரை பின் தொடர்ந்தது. இதனால் விஜய் காரை விட்டே கீழே இறங்க முடியவில்லை. சிறிது நேரம் காருக்குள்ளேயே காத்திருந்தார். ஆனாலும் கூட்டம் குறையவில்லை. இந்த நிலையில் அவர் வேறு வழியில்லாமல் அஞ்சலி செலுத்தாமலே பாதியில் திரும்பி விட்டார். அஜித்திற்கு கிடைத்த வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *