KollywoodNow

Tamil CInema Updates

பதவிக்காக கட்சியில் சேரவில்லை – கவதமி

அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியுடன் கவுதமி

நடிகை கவுதமி பாஜக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ைது பற்றி அவர் பேசியதாவது,
நான் பல ஆண்டுகளாக அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்களைப் பார்த்து வந்திருக்கிறேன். பல முறை நேரில் பார்த்திருக்கிறேன். அவரது ஆற்றலைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். எனது கருத்திற்கும், கொள்கைக்கும் உடன்பாடாக இருந்ததால் தற்போது அதிமுகவில் நான் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்துப் பேசினேன். எனக்கு வாழ்த்துச் சொல்லி சிறப்பாக செயல்பட வேண்டும் கூறியிருக்கிறார். கட்சியின் தலைமை சொல்கிறபடி நான் செயல்படுவேண். பிரச்சாரம் செய்யச் சொன்னால் வரும் தேதலிலும் பிரச்சாரம் செய்வேன். மற்றபடி பதவிகளை எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை. சொத்து பிரச்சனைக்காத்தான் கட்சியில் சேர்ந்ததாக பேச்சு எழும். ஆனால் அது என் தனிப்பட்ட பிரச்சனை. யாரோடும் சண்டை போடுவதற்காகவும் நான் கட்சியில் சேரவில்லை. இதற்கு முன்பு நாந் விருது நகர் பகுதியில் பாஜக கட்சிக்காக தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றினேன். வரும் தேர்தலில் எனக்கு சீட் கொடுத்தால் பார்ப்போம் என்றார் நடிகை கவுதமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *