சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, சாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே.சத்யா, தாசரதி, ஷரவ் ஆகியோர் உட்பட பலமுக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17 மார்ச் 2024 வரை நடைபெறுகிறது. ஷார்ஜா, ஹைதராபாத், சண்டிகர், திருவனந்தபுரம் என நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்துரி மற்றும் சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரைக்கையாளர்களை இன்று சந்தித்தனர்
நடிகர் ஆர்யா கூறியதாவது.,
சிசி எல் போன்ற ஒரு போட்டியை ஒருங்கிணைத்து நடத்துவது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு வருடமும் ஆர்வம் குறையாமல் அதை நடத்தி வருகிறார் விஷ்ணு. அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைந்து, அதை புத்துணர்ச்சியோடு நடத்தி வருகிறார். எங்கள் அணியை பொறுத்தவரை அனைவரும் நட்போடு இணைந்து விளையாடுகிறோம். நாங்கள் விளையாட்டின் போது சினிமாவை ஒதுக்கி வைத்து, முழுமூச்சாக விளையாட்டை மட்டுமே நோக்கமாக கொண்டு விளையாடுகிறோம். ஒவ்வொரு வருடமும் விளையாட்டு முடிந்து, நாங்கள் எங்களது தனிப்பட்ட வாழ்கைக்கு திரும்பினாலும், அடுத்த வருடம் விளையாட்டு துவங்கும் போது, விட்ட இடத்தில் இருந்து தொடருவோம் மிகவும் உற்சாகமாகிவிடுவோம். இது தான் இதன் சிறப்பம்சமே… இது ஒரு ஆரோக்கியமான, அதே நேரத்தில் மகிழ்ச்சி நிறைந்த விளையாட்டு. இதில் பங்குகொள்வது மகிழ்ச்சி.