இன்றைய சூழலில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இது திரையுலகிற்கு வரப்பிரசாதமாக அமையும் என்று திரையுலகினர் பலரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர். தியேட்டரில் வெளியாகாத திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டு விடலாம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இன்று அதுவே விணையாக வந்து நிற்கிறது.
படம் வெளியாகி மூன்று வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் திரைப்படத்தி வெளிட்டு விடுவதால் தியேட்டர்களில் கூட்டம் வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்திருக்கிறது. இது முதலில் கேரளாவில் எழுந்து மலையாள திரையரங்க உரிமையாளர்கள் படங்களை திரையிடுவதில்லை என்று போர்க்கொடி உயர்த்தினார்கள். தியேட்டரில் படத்தை வெளியிட்ட பிறகு 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
தற்போது அதே கோரிக்கையை முன் வைத்தும். கூடுதலாக இன்னும் சில கண்டிஷன்களை நிறைவேற்றினால்தான் தமிழ்நாட்டிலும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவெடுகப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வரையும் இஅவர்கள் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.