கதை ; முன்னாள் இராணுவ வீரரான நாயகன் சபீர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி மிர்னாவை இயற்கை முறையில் பிரவசவிக்க அடர்ந்த வனத்திற்குள் இருக்கும் தன்வந்திரி வைத்தியசாலைக்கு அழைத்து வருகிறார். அங்கு வந்த பிறகு தனது கணவர் நடத்த்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார் மிர்னா. ஆனால் சூழலும் கணவரும் அவளை நம்பிக்கை ஏற்படுத்தி தங்க வைக்கிறார்கள். இந்த நிலையில் விருப்பமில்லாமல் தங்கும் மிர்னா நல்லபடியாக குழந்தை பெற்றுக் கொண்டாரா இல்லையா என்பதை உளவியல் ரீதியான முறையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன்.
நடிப்பு ; சபீர் கலாரக்கல் ராணுவ வீரருக்கான மிடுக்கோடு இருக்கிறார். போர்க்களத்தில் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தால் மன ரீதியான பிரச்சனையில் இருக்கும் அவர் நடிப்பு மர்மமாக உள்ளது. மிர்னா தாயாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கடைசி வரைக்கும் அவரது நடிப்புத்தான் படத்தை நகர்த்துகிறது. வனமும் அந்த சூழலும் நமக்குள் திகிலை ஏற்படுத்தினாலும் சுவராஸ்யமான சம்பவங்கள் இல்லாததால் எப்போது படம் முடியும் என்ற சிந்தனை வருகிறது. துணைக்கதாபாத்திரங்கள் ஊமையனாக வரும் பாத்திரம் குழப்பமாக வருகிறது.
இயக்கம் ; இயற்கை முறையில் நடக்கும் பிரசவத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் முயற்சி பாராட்டக்கூடியது. இதற்கான கதையை ஸ்ரீராம் சிவராமன் எழுதி தயாரித்திருகிறார். கதையில் கற்பனை வறட்சி. இயக்கத்தில் நல்ல தேர்ச்சி.
இசை ;விஷால் சந்திரசேகர் படத்தை நகர்த்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவு ;உதய் தங்கவேல் இயற்கையை அழகாகவும், திகிலாகவும் காட்சி பலம் கொடுத்திருக்கிறார்.
ரிசல்ட் ; நல்ல தகவல் தொல்லை திரைக்கதை
——————————————–