KollywoodNow

Tamil CInema Updates

சந்தானம் நடிக்கும் அடுத்தப் படம்

அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
இங்க நான் தான் கிங்கு’ என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார்.
சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.
பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை உலகநாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *