KollywoodNow

Tamil CInema Updates

கருணாநிதி இடத்தில் வடிவேலு

வைகைப் புயல் வடிவேலு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டிருக்கிறார். க்ருணாந்தியின் அன்பைப் பெற்ற அவர் திமுக கட்சிக்காக பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம். இதன் பிறகு தொடர்ந்து திமுகவின் அனுதாபியாக இருந்தாலும் வெளிப்படையாக அதைக் காட்டிக்கொள்ளவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக நல்ல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமலிருந்த அவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது அதே பகத் பாசிலுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கருணாந்தியின் நினைவிடத்தை பார்வையிட்டு ரசித்திருக்கிறார். அதில் கருணாநிதி அவர்கள் அமர்ந்த சொகுசு ஷோபா அருகில் அமர்ந்து கருணாநிதி உயிருடன் இருந்தபோது எப்படி போட்டோ எடுத்துக் கொண்டாரோ அதே போலொரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *