KollywoodNow

Tamil CInema Updates

ஹன்சிகா நடிக்கும் ஹாரர் படம்

ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் பிரதீப் ராயன், சுரேஷ் மேனன்,ஸ்ரீமன்,அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்பொழுது,” நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றி தான் முதலாவதாக பேசுவேன்.ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன். இந்த இரட்டை இயக்குனர்களின் முதலாவது படமான கூகுள் குட்டப்பா வெளியாகும் முன்பே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள். சாம்.C.S உடன் பழக்கம் உள்ளது.கலைஞர்-100 நிகழ்விற்கு நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார்.அவருக்கு நல்ல குரல்வளம் அவருக்கு உள்ளது. அவருக்கு இசைவெறி உள்ளது. கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார். என்னுடனும் என்னுடைய உதவியாளர்களுடன் பணி புரிந்தமைக்கு மிக்க நன்றி. ஹன்சிகாவும் சிறப்பாக நடித்திருந்தார்.அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.’கார்டியன்’ என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்”, என முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *