கதை – திருமணம் ஆகாமல் இருக்கும் சந்தானம் சொந்த வீடு இருந்தால் பெண் கிடைத்து விடும் என்று பல லட்சங்களை கடன் வாங்கி வீடு கட்டுகிறார். வாங்கிய இந்த கடனை அடைக்கும் வகையில் பெண் தேடுகிறார். அவருக்கு ஜமீன் வீட்டு பெண் கிடைக்கிறது. இதற்கு மறுபுறம் சென்னையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த தீவிரவாதிகள் கூட்டம் சதித்திட்டம் தீட்டுகிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றிவேல் குடும்பத்தில் சிக்கி கொள்ள திரும்பங்கள் நிகழ்கின்றன. இறுதியில் வெற்றிவேல் தன்னுடைய கடனை அடைத்தாரா? சென்னையில் குண்டு வெடித்ததா? – இப்படி இரு வேறு கதைகளை முடிச்சுப்போட்டு சொல்லியிருக்கும் படம்தான் இங்க நான் தான் கிங்கு.
வழக்கமான சந்தானம் பஞ்ச் வசனம் நகைச்சுவையில் தியேட்டரை அதிரடிக்கிறார். படம் முழ்வதும் தனது கற்பனை மற்றும் சக கதாபாத்திரங்களை கையாளும் திறமையில் சந்தானம் ஹீரோவாக ஜொலிக்கிறார். கதைக்கு எழுச்சூர் அரவிந்த், இயக்கத்திற்கு ஆன்ந்த் நாராயணன் என்று இருவரும் சந்தானத்தின் நாடித்துடிப்பு தெரிந்து தங்கள் திரைக்கதையை அமைத்திருப்பதால் படத்தில் நொடிக்கு நொடி கதைட்டல். போரடிக்காத கதைக்களம் என்று சிரிப்பில் புல் மீல்ஸ் போட்டு அசத்துகிறார்கள். சில காட்சிகள் சந்தானத்திற்கு செட் ஆகாமல் போயிருக்கிறது.
திரைக்கதையைத் தாண்டி சந்தானம், சக நடிகர்களைக் கலாய்க்கும் காட்சிகள் நன்றாக கைகொடுத்திருக்கிறது. விவேக் பிரச்சன்னாவிடம் பேசும் பஞ்ச், மூதாட்டியிடம் நீ ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் என்று நெனச்சேன். கேரக்டர் ஆர்ட்டிஸ்டா என்று சொல்லும் இடம் தியேட்டரே குலுங்குகிறது. இப்படி தனி மனிதனாக படத்தை காப்பாற்றியிருக்கிறார் சந்தானம்.
ஆனால் தொலைகாட்சி நாடகங்கள் போலவே தீவிரவாதி, போலீஸ் என்று சலிக்க வைக்கும் காட்சிகளும் இருக்கின்றன.
தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் ஆகியோர் தேர்ந்த நடிப்பில் கவனம் பெறுகின்றனர். இமான் இசையில் மாயோனே பழைய டியூனாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் வெயில் காலத்தில் நகைச்சுவையால் நம்மை குளிர வைத்து அனுப்புகிறார் சந்தானம்.