KollywoodNow

Tamil CInema Updates

ஹிட் லிஸ்ட் – விமர்சனம்

ஐடி-யில் பணியாற்றும் விஜய்யின் (விஜய் கனிஷ்கா) அம்மாவும் (சித்தாரா) தங்கையும் (அபி நட்சத்திரா) முகமூடி அணிந்த 1 மர்ம நபரால் கடத்தப்படுகிறார்கள். காவல்துறை துணை ஆணையர் யாழ்வேந்தன் (சரத்குமார்) குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறார். ஆனால் அவரது முயற்சிகளை முறியடிக்கும் அந்த முகமூடி மனிதன், விஜய் ஒரு கொலை செய்ய வேண்டும் என்றும் மறுத்தால் அம்மாவையும் தங்கையையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகிறான். எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத வள்ளலார் பக்தனான விஜய், கொன்றானா? அந்த மர்ம மனிதன் யார்? அவன் நோக்கம் என்ன என்பதே படம்.
. விஜய் கனிஷ்கா எனும் பெயருடன் அறிமுகமாகி உள்ள விக்ரமன் மகன் முதல் படத்தில் நடிப்பது போன்று தெரியாத அளவுக்கு இந்த படத்துக்காக நடிப்பு பயிற்சியை எடுத்துக் கொண்டு நடித்துள்ள நிலையில், அவரது நடிப்பு பார்க்கும்படியாக உள்ளது. ஆனால், இன்னமும் நடிப்பில் பல இடங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
சரத்குமாரின் தேர்ந்த நடிப்பு தான். கதை, திரைக்கதை என அனைத்துமே சுமாராகவே உள்ள நிலையிலும் தனது நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். முதல் பாதியில் அவருக்கு சண்டைக் காட்சிகள் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் சரத்குமார் போடும் சண்டை அப்ளாஸ் அள்ளுகிறது. சமுத்திரகனி, கெளதம் மேனன், அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

ஹாலிவுட் திரைப்படங்களை போல் இருந்தாலும் விஜய் கனிஷ்கா நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. காவல்துறை அதிகாரியாக சரத்குமார் ரசிக்க வைக்கிறார். அவருக்குக் கீழ் பணியாற்றும் காவலராக முனீஷ்காந்த், அம்மா சித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், டீன் கவுதம் வாசுதேவ் மேனன், அப்பா சமுத்திரக்கனி, ரவுடி ராமச்சந்திர ராஜு என அனைவரும் குறையற்ற நடிப்பைத் தந்துள்ளனர். சத்யாவின் பின்னணி இசையும் ராம்சரணின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்புக்குப் பக்கப் பலமாக அமைந்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *