வனத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வரும் நாண்கு நண்பர்களை காடுக்குள் அழைத்துச்செல்கிறார் வன ஊழியரான பால சரவணன். அங்கு இருக்கும் எச்சரிக்கை பலகையை மீறி சென்று அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்தான் படம். பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சூனியக்காரியின் ஆவி தன் ஆயுளை நீட்டித்ததர்காக சாத்தானுக்கு காணிக்கை கொடுக்க உயிர் பழி எடுக்க காத்திருக்கிறது. அந்த நேரத்தில் இவர்கள் காட்டுக்குள் கால வைக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதை திகில் பரவ சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
பெரிய ஸ்டார்கள் இல்லை. பிரமாண்டமான பட்ஜெட் இல்லை. க்ளாமர் டான்ஸ் இல்லை. ஆனால் 2 மணிநேரம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் வித்தையை இயக்குனர் ராமச்சந்திரன் தெரிந்து வைத்திருக்கிறார். படம் தொடங்கியதிலிருந்து நம்மை சீட்டில் உடகார முடியாமல் செய்கிறார். சூனியக்காரியும் அவள் சபதமும், அவள் முகத்தை திருப்பும் காட்சியும் திடுக்கிட வைக்கும் இடங்கள் பாலச ரவணன் மட்டும்தான் தெரிந்த முகம். அவரும் இந்த படத்தில்தான் இயக்குனர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார். அவர் ட்ரேட் மார்க் சிரிப்பை மாற்றி திகிலை நமக்குள் பரவ வைக்கிறார். நல்ல வேடம்.
காயத்ரி, ப்ரீத்தி, தேவ், ஜனா, சினியம்மாள், பட்டுராஜா, சாந்திமணி ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள். புதிய ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பணியை பாராட்ட வேண்டும். காடுகளை காட்சிப்படுத்தியே நம்மை பயமுறுத்துகிறார். இசைராஜேஷ் முருகேசன். தேவையான இடங்களில் மட்டும் இசையை வைத்து பயம் கொள்ள வைக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியும் அந்த வீடும் மிரட்டுகிறது. ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன்.
சிறிய படம் என்கிற அடையாளத்தோடு வந்த பேச்சி பிரமாண்ட மிரட்டலில் நம்மை மிரள வைக்கிறார்.
பேச்சி – திகில்
பேச்சி – விமரசனம்