KollywoodNow

Tamil CInema Updates

ஹெச்.எம்.எம். – விமர்சனம்

ஹெச்.எம்.எம். – விமர்சனம்
நாட்டின் பாதுகாப்பு பற்றிய இணையதகவல்களை நாயகனின் கம்யூட்டரிலிருந்து அந்நிய நபர்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்து திடுக்கிடுகிறார் ஹீரோ. இதை யார் செய்திருப்பார்கள் என்பதை கண்டு பிடிக்க முயற்சி செய்கிறார். ஊட்டியில் ஒரு பங்களாவில் தங்கியிருக்கும் இரு தோழிகள் இருவரையும் மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கிறார். இந்த இடத்தை தொடர்ந்து கண்காணித்து நாயகனும் அங்கு செல்கிறார். அங்கே தோழி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அதே வீட்டில் இருக்கும் இன்னொருவர் என்ன ஆனார் ? அவர்களை கொலை மிரட்டல் விடுவது யார் என்பதை திகிலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர்
முழுக்க ஊட்டியில் ஒரே எஸ்டேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. கொலை ரத்தம். பதட்டம் என்று படம் முழுவதும் செல்கிறது. இரவில் அதிகமாக எடுக்கப்பட்டிருப்பதால் காட்சிகள் மிரட்டுகிறது.
நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக் போன்ற நட்சத்திரங்கள் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கிரண், பின்னணி இசை –புரூஷ, படத்தொகுப்பு – துரைராஜ், சண்டை பயிற்சி – “ஸ்டண்ட்”-சுரேஷ்
படத்தில் திரைக்கதையில் ஏற்பட்டிருக்கும் தொய்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஊட்டியின் வறண்ட காலத்தை இதில் பார்க்க முடிகிறது. படத்தில் ஆபாச காட்சிகளோ வனமோ இல்லாதது ப்ளஸ்.
ஹெச்.எம்.எம். – திகில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *