KollywoodNow

Tamil CInema Updates

ரமேஷ் அரவிந்த் – கணேஷ் கூட்டணியில் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’

கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ ரமேஷ் அரவிந்த் மற்றும் ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் ஆகிய இருவரும் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது.
இந்நிகழ்வில் ரமேஷ் அரவிந்த் பேசுகையில், ” இயக்குநர் விக்யாத் ஏ. ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் ‘புஷ்பக விமானம் ‘ எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்த தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வை பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான.. உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது. இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதை காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.‌

‘புஷ்பக விமானம்’, ‘மழைக்கால ராகம்’ போன்ற படங்களை தயாரித்த விக்யாத், ‘யுவர் சின்சியர்லி ராம்’ எனும் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவருக்கு இயக்குநராக இது முதல் பயணம். இதில் நானும், கணேசும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ரமேஷ்- கணேஷ் கூட்டணி.. எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. சாண்டல்வுட்டின் பிரியத்துடன் பழகும் நடிகர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு… இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், எங்களின் ஆழமான நட்புறவு மற்றும் உற்சாகத்தையும் எதிரொலிக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *