KollywoodNow

Tamil CInema Updates

டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்

டூரிஸ்ட் பேமிலி – விமர்சனம்
இலங்கை தமிழரான சசிகுமார் தனது மனைவி சிம்ரன் மற்றும் மகன்களோடு போலீஸ்க்கு தெரியாமல் தமிழ்நாட்டுக்குள் வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் அவர்களை அழைத்துச்செல்ல சிம்ரனின் சகோதர யோகிபாபு மூலமாக சென்னை வந்து ஒரு குடியிருப்பில் தங்குகிறார்கள். இலங்கை வாழ்வை மறந்து சந்தோஷத்துடன் வாழத் தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டுவெடிப்பால், தர்மதாஸின் குடும்பத்தை போலீஸ் தேடுகிறது. அதுவும் அவர்களை கட்டாயம் கண்டுபிடித்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கும் போலீஸ் அதிகாரி சல்லடை போட்டு தேடுகிறார். இந்த நிலையில் சசிகுமார் குடும்பம் என்ன ஆகிறது என்பதே படம்.
இலங்கை தமிழராக சசிகுமார் முகம் அழகாக பொருந்திப் போகிறது. அவர் தன் ஸ்டார் அந்தஸ்த்தை விட்டு எளிமையாக கதாபாத்திரத்தின் தன்மையை பிரதிபலிக்கிறார். சின்னச்சின்ன நடவடிக்கைகள் மூலம் குடியிருப்பு மக்களிடம் மனதால் நெருங்கி பழகும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் ரசிக்க வைத்து விடுகிறார். அவரது ட்ரேட் மார்க் நடிப்பும், மகன் அவரை ஆட வைக்கும் நடனமும் இன்னமும் சிம்ரன் இளமைதான். ஒரு குடியிருப்புக்கும் நடக்கும் கதையாக காட்டப்பட்டிருப்பது மட்டுமே பல படங்களில் பார்த்த திரைக்கதையாக இருக்கிறது. மற்றபடி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானத்தை படம் போட்டுக் காட்டுகிறார் இயக்குனர் அபிஷன்.
போர் காலத்தின் சுவடுகளை மறைக்க அந்தக் குடும்பத்தின் அனைவருமே மகிழ்ச்சியான மனநிலைக்கும், உடல்மொழிக்கும் தங்களை மாற்றிக்கொண்டிருப்பதாக் காட்டுவது போர்ச்சூழலின் துயரத்தை நமக்குள் மறைமுகமாக காட்டுகிறது. திரைக்கதையின் இறுதியாக வைத்திருக்கும் சஸ்பென்ஸ் உடையும் பொது கரகோசம் கேட்கிறது. ஒருவரின் தீவிர அன்பு மற்றவர்களுக்குள் ஏற்படுத்தும் மாற்றத்தை காட்டும் விதம் அழகு.
யோகிபாபு வரும் இடங்களில் சிரிப்பு. எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், பகவதி, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, ராம்குமார் பிரசன்னா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம். அரவிந்த் விஸ்வநாதனின் கேமராவும், பரத் விக்ரமனின் படத்தொகுப்பும் வழ வழ காட்சிகளை எடுத்து விறு விறுப்பைக் கூட்டியிருக்கிறது. இந்த குடும்பம் காவலர்களிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிற பதட்டம் நமக்குள் வரவழைக்கிறது. இயக்குனர் அபிஷன் ஜிவிந்த் பாராட்டுக்குரியவராகிறார்.
டூரிஸ்ட் பேமிலி – நல்லதொரு குடும்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *