KollywoodNow

Tamil CInema Updates

இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது
இயக்குநர் வெற்றிமாறன், ” ராம் தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், ரிலீஸ் தாமதமாவதால் சின்ன கேப்! சிவாவுடன் ராம் படம் செய்கிறார் என்றதும் சர்ப்ரைஸாகதான் இருந்தது. ‘ என் மகன் செய்யும் சேட்டைகளை படமாக எடுப்பேன். அதுதான் இது’ என்றார். ‘தங்கமீன்கள்’ படம் ராமின் மகளுக்காக இந்தப் படம் அவர் மகனுக்காக. ராம் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இந்தப் படத்தில் என்னுடைய ஆயிரமாவது பாடலை எழுதி இருக்கிறேன். இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஹ்மான் முன்னிலையின் இந்தப் பாடலை வெளியிட நினைத்தேன். ஆனால், அவர்களின் வெவ்வேறு கமிட்மெண்ட்டால் வர முடியவில்லை. என்னுடைய முதல் பாடலான ‘இரும்பிலே ஓர் இருதயம்…’ பாடலை எனது மனைவி தான் படித்துவிட்டு வாழ்த்தினார். அதனால், அவருடன் இந்த நிகழ்வு நடப்பதுதான் சரியானது. என்னுடைய மகனும் வந்திருக்கிறார். இந்தப் பாடலை கேட்பவர்கள் புகை பிடிப்பதை நிறுத்தினால்தான் எங்களுக்கு வெற்றி. படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்”.

நடிகர் சிவா, ” இயக்குநர் ராம் நம் அனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம். எனக்காக நிகழ்வுக்கு வந்த மிஷ்கிம் சாருக்கும் நன்றி. நிச்சயம் படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்”.

நடிகை அஞ்சலி, “சில படங்களும் அதன் கதாபாத்திரங்களும்தான் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். எனக்கு ‘பறந்து போ’ அப்படியான படம். வனிதா கதாபாத்திரம் நிச்சயமாக அனைவர் மனதிலும் நிற்கும். ராம் சார் ஸ்டைலில் ஒரு கமர்ஷியல் கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் ‘பறந்து போ'” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *