KollywoodNow

Tamil CInema Updates

கம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் வெளியீடு

மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கம்பி கட்ன கதை’.

ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ‘கம்பி கட்டுன கதை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்.7) நடைபெற்றது
தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது:

இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்ன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு.

ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள்.

இந்த படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். இது ஒரு லாஜிக் இல்லாத கதை அல்ல – பகுதி 2 எடுக்கப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. எல்லோரும் இதைப் பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். 15 நாட்களில் படம் வெளியாகும். அனைவருக்கும் என் நன்றிகள்.

இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் என் நண்பர்கள்தான். இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. நாங்கள் இந்த கதையை உருவாக்கியதில் பெருமை கொள்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி. எல்லோரும் உறுதியாக இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *