சிறை – விமர்சனம் .
வேலூரில் போலீஸ் ஏட்டாக வேலை செய்யும் கதிரவன் ஒரு குற்றவாளியை பாதுகாப்பாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது ஒரு பேருந்திற்குள் வைத்து தாக்கப்பட்ட ஒரு பதட்டமான காட்சியுடன் தொடங்குகிறது.
அப்போது அந்த கைதி தப்பிக்க முயலும் போது, கதிரவன் அவனைப் பொது இடத்தில் வைத்து சுடுகிறார். மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது, கதிரவன் தனது செயலை நியாயப்படுத்துகிறார். தனது பேச்சில், ஒரு ஏட்டு இந்த அமைப்பால் தான் எவ்வாறு பாதிக்கப்படுகிறார் என்பதை விளக்கி, தன்னைப் போன்ற அடிமட்ட காவலர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டி சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்.
இந்த நெருக்கடி நிறைந்த நேரத்தில் தன் சக தோழனுக்கு விடுமுறை கிடைக்க, தன் சக தோழன் பணியை செய்ய வேண்டிய சூழல் அமைகிறது. கதிரவன் மற்றும் ஆயுதப்படை துறையைச் சேர்ந்த மேலும் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அப்துல் என்ற கைதியை வேலூர் சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும் பொறுப்பு இந்த மூவரிடமும் ஒப்படைக்கப்படுகிறது.
அப்துல் தப்பிக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறான். நீதிமன்றத்தை நோக்கிய அந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், கலையரசி உடனான காதலால் அனிஷ்மா அனில்குமார் அவன் குற்றவாளியானது எப்படி, அவனது நோக்கம் என்ன, அவனது பின்னணி என்ன என்பது போன்ற பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது. தன்னை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கேட்கிறான். அப்துலின் கதையை கேட்டு அதில் உள்ள சட்ட சிக்கலைப் புரிந்து நுணுக்கங்களை அறிந்து கதிரவன், அவருக்கு உதவுகிறான். ஆனால், அவர்கள் பெரும் சக்திகள் எதிர்கொள்ள சூழல் ஏற்படுகிறது. அப்போது கதிரவன் தனது கடமையை செய்வதற்கு, தனது மனிதநேயத்தை பின்பற்றுவதற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு காவல்துறை தலைமைக் காவலரின் மனப் போராட்டங்களையும், ஐந்து வருடங்களாக விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் தன் காதலி கலையரசியுடன் சேர்ந்து வாழ விரும்பும் ஆவலையும் திரைமொழியில் காட்டுகுறது சிறை படம்.
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இரண்டு மணிநேரத்திற்குள் அழுத்தமான உணர்ச்சிக் கொந்தளிப்பான கதையை பரபரப்பான திரைக்கதையில் பார்த்தது மகிழ்ச்சி.
விகரம் பிரபு பல இடங்களில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார். அவரின் பார்வையும், உயரதிகாரிகளின் அழுத்தத்தினால் சக காவலர்களுக்கு பரிந்து பேசும் கட்டதிலும் நல்ல முகபாவனை காட்டி கைதட்டல் வாங்குகிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் அவர் காட்டிய பதட்டம்தான் நம்மை கலங்க அடிக்கிறது. திரைக்கதையின் பலத்தை நடிப்பில் காட்டி அசத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. கதிரவன் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்குப் பேசப்படும்.
புதுமுகம் அக்ஷய் முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்து கைதட்டல் வாங்கியிருக்கிறார். அனிஷ்மா அனில்குமார் பரிதாபத்தை அள்ளிக்கொள்ளும் பாத்திரம் அழகாக காட்டியிருக்கிறார். கூடவே வரும் ஆனந்த தம்பிராஜா – மரியம், மூணாறு ரமேஷ் – போலீஸ் இன்ஸ்பெக்டர்
அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ்
அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு
காவலராக ஹரிஷங்கர் நாராயணன் இப்படி பலரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரெம்யா சுரேஷ் நடிப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு குணச்சித்திர நடிகை கிடைத்திருக்கிறார். கமலா காமேஷ் தோற்றத்தில் இருக்கும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மூணாறு ரமேஷ் ஒரு கட்டத்தில் பேசும் வசம் கைத்தட்டல் வாங்குகிறது. மத நல்லணத்திற்கு எத்தனை படங்கள் எடுத்தாலும் இந்த ஒரு காட்சிக்கு இணையாகாது.
இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி திரைக்கதையும் அதை படமாக்கிய மாதேஷ் மாணிக்கத்தின் காட்சியமைப்பும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. அடுத்த என்ன காட்சி என்பதை யூகிக்க முடியாத கதையின் போக்கு நம்மை இருக்கையின் நுனிக்கு வரவைக்கிறது. இந்த ஆண்டில் வந்த மீகச்சிறத படம் சிறை.
தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் மதேஷ் மாணிக்கத்தின் கேமரா கோணங்கள் மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு, பிசி டண்ட்ஸ் சண்டை அமைப்பு என்று எல்லாமே சிறப்பாக அமைவது அரிது. சிறை படத்தில் அது நடந்திருக்கிறது.
சிறை – சிறந்த படைப்பு.
சிறை – விமர்சனம் .